Monday, May 5, 2008

எனது கவிதைகள்

மாற்றம்

நம்பியார் போல் இருந்தேன்

எம்.ஜி.ஆர் போல் மாற்றியது நாக்குபுண்னு

வானவில்

வந்து சென்றதால் உன்னை மின்னல் எனவா

நீ பார்த்த பார்வையால் என் மனதில் சாரல் அல்லவா

உன்னை நாளும் சுற்றும் மேகமாகவா

உன்னை கண்ட நிமடங்களில் காற்றில் மிதக்கவா

மனதோடு இணைந்ததால் என் காட்டில் மழை அல்லவா

வீட்டில் தெரிந்து உன் அண்ணன் அடித்த அடி இடி அல்லவா

நவின வேலை

முகம் தெரியாத முதலாளிக்கு உழைத்துக் கொண்டு இருக்கிறேன் என் வீட்டில் உள்ளவர்கள் முழிப்பதற்கு முன்பில் இருந்து

நண்பனே

பாதைகள் மாறினோம்
பணம் பதவியை நோக்கி ஓடினோம்
வகுப்பு அறையில் இணைந்தோம்
புதுப்பேச்சில் பழக்கமானோம்
புன்சிரிப்பை உதிர்த்துக் கொண்டோம்
ஒரே தட்டில் உணவு கொண்டோம்
உண்மை மறைக்காமல் நட்பை வளர்த்தோம்
சுற்றுலா சில சென்றோம்
புகைப்படங்களிலும் புன்னகை பதிவு செய்தோம்
விடியவிடிய வெட்டி கதை பேசியிருக்கோம்
பரீட்சை நேரங்களில் பாடங்களை பற்றி பேசலானோம்
கல்லூரி இறுதி நாள் வந்தது
கணத்த இதயத்தை பரிசாய் தந்தது
கண்களில் ஓரம் கண்ணீர் கொண்டு
மறுமுறை கண்டுகளிக்கும் நாள் என்று??

சைவமா?

உயிரை கொன்று புசிப்பது அசைவம் என்றால்
முளைத்த பயிரை உண்பது சைவமா?

மாசு

மாசுகட்டுபாட்டை பற்றி விவரிக்க வருகின்றனர்

புகைகொண்ட வாகனத்தில்

உன் நினைவுகளின் தொடர்ச்சி

கண்கள் நினைகின்றன

உன் நினைவுகளால்

காதில் ஓலிகின்றன

உன் குரல்களால்

கால்கள் நகர்கின்றன

உன் தடம் நோக்கி

மனது சொல்கின்றன

நீ என் இருள்நிக்கி

தோல்கள் எங்குகின்றன

உன் தலைசாய

கைகள் விரிகின்றன

உன் கரம் பற்ற

உயிர் உருகின்றன

உன்னுடன் வாழ

வண்ணத்துப்பூச்சி


வட்டமிடும் வண்ணத்துப்பூச்சியே

வனத்திலும் வயல்களிலும் உனதுஅட்சியே

எண்ணற்ற வண்ணங்களில் சிறகு கொண்டாய்

எட்டி பிடிக்கலாம் என்றால் விடைபெற்று சென்றாய்

பூக்களில் தேன் எடுத்து

பெண்பூக்களை கனிய வைத்து

காகிதம் போல் பறக்கிறாய்

காண்போரை வியக்க வைக்கிறாய்

சிறகுகள் தா

உன்னோடு சேர்ந்து பறப்பதற்கு

அனுதினம் வா

என் மனதில் பூப்பதற்கு

ராசி
ரோட்டில் ராசிக்கல் மோதிரம் விற்கிறான்

தனது ராசியை மறந்து


தேவை தேவதை


செந்நிற முடிகொண்டு

பூனை கண்கள் இரண்டு

சந்தன நிறம் கொண்டு

அழகுபல் வரிசை முப்பதிரெண்டு

அன்னை மனம் கொண்டு

அன்பின் வழிகண்டு

செல்ல் சினம் கொண்டு

சிரிக்கும் நகை கண்டு

கண்கள் கனவில் நின்று

காணும் நாள் என்று?!!!

உன் நினைவுகள்

மின்னல் ஒளியாய் வந்தாய்

முதல் சந்திப்பிலே வியக்க வைத்தாய்

உன் பேச்சுக்கள் என்னுள் புதியதாய்

புகுந்து என்னை புலம்ப வைத்தாய்

புலன்கள் பற்றி ஆராய்ந்து இருக்கிறாய்

எனக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு விடையளித்தாய்

தென்றலாய் வந்தாய் தொடர்கதையாய் சென்றாய்

பல நேரங்களில் என்னை கவனித்(த)தாய்

உன் அறிவை கண்டு வியக்கிறேன்

உன் துணிவை கண்டு உன்னை மதிக்கிறேன்

உன் பேச்சில் பல செய்திகள் சேகரிக்கிறேன்

உன் பிரிவை நினைத்து செயல் இயக்கிறேன்

பரிசு பெறா கவிதை

(சூரியன் பண்பலையில் ஸ்நேகாவை பற்றி ஒர் கவிதை போட்டி வைத்தனர் அதற்கு அனுப்பிய கவிதை இதோ)

ஏய்! நீ ரொம்ப அழகாயிருக்கே!

நீ பார்த்திபனின் கனவா என்று தெரியாது

உன்னை நினைத்து

ஆனந்தம் அடைகிறேன்

உன்னை பார்த்தாலே பரவசம்தான்

ஏப்ரல் மாதத்தில் பிறந்த நான்

விரும்புகிறேன்

காதல் சுகமானது.

என்னவள்

என்னிடத்தில் வருவாளோ

இன்பம் கொஞ்சம் தருவாளோ

பூ முகம் தொடுவேனோ

புதிய சுகம் அறிவேனோ

பாதம் நடைபழகுவதை பார்த்து பார்த்து

கன்னியின் கடைக்கண் திறக்குமா என்று காத்து காத்து

மனம் கொண்ட தென்றல்

மாலையில் ஆடி வர

ஆடைஅணிகலன் கொண்ட (மயில்) தொகை விரித்தாட

மதுவில் மயக்கம் கொள்ளாது மாறினேன்

புகைந்த மனதுக்கு புனிதம் தந்தாய்

பூவாய் வந்தாய்

புயலாய் சென்றாய்

இனிய சொல் பேசுவாய்

இயந்திரமாக இயங்குவாய்

நீ கொண்ட நிறத்தின் பளபளப்பு

அதனால் ஏற்பட்டது நதிக்குள் சலசலப்பு

சுட்ட சூரியனுக்கு பரிபோனது கொதிகொதிப்பு

நின்னை நிறம்மாற்ற முடியாமல் பரிதவிப்பு

பொங்கல்

மண்ணை மிதித்து மாவாக்கி

அச்சில் வைத்து உருவாக்கி

சுவலையில் வைத்து சுட்டு

உருவானது கல்,

அதன் பெயர் செங்கல்.

சந்திரன் முழுமையானது

இரவு வெண்மையானது

நிலவு தேய்ந்துபோனது

இருள் சுழ்ந்துகொண்டது

ஐயாறு நாட்களில்

உருவானது கள்

அது திங்கள்

மழையில் நினைந்து

வெயிலில் அலைந்து

வயிறு வளர்க்க

வாழ்க்கை நடத்தும் மக்கள்

செங்கல், திங்கள், மக்கள் கொண்ட பொங்கல்



எது சரி

8 மணிக்கு அலுவலத்தை திறக்க வேண்டியவர்கள்

8.20 ஆகியும் திறக்கவில்லை என்று

8.30 மணி அலுவலத்திருக்கு

தினமும் 9 மணிக்கு செல்லும் நான் என்ன சொல்வது?

1 comment:

Ramesh from Pudukkottai said...

Dear Pangu..

Edhir paarthadhu pala..

Ulladho sila...

Innum Varum..

ena edhir paarthu kaathu irukkum..

Ramesh